இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 241 ரன் எடுத்தது. போட்டி ‘டை’ ஆனதன் காரணமாக, ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் இரண்டு அணிகளுமே 15 ரன்களை எடுத்து மீண்டும் போட்டி ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளை அடித்த காரணத்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டிகள் யாவும் ஒரு அணிக்கு சாதகமாகவே முடிந்துள்ள நிலையில், நேற்று நடந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆட்டத்தின் கடைசி நொடி வரை போட்டியில் அனல் பறந்தது. ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு வாழ்கையில் மறக்க முடியாத போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடத் தொடங்கிய நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன் குப்தில் வழக்கம் போல் சீக்கிரமாக அவுட் ஆகி நட