இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை..
கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ்
முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங்
பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான
நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன்.
இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார்.
நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழக அணிக்கு எமனாக வந்தார் அர்பித் வசதேவா. இவர் ஒரு பக்கம் தூண் போல் நிற்க மறுபக்கம் சவுராஷ்ட்ரா அணிக்கு விக்கெட் விழுந்து கொண்டிருந்தது. வசதேவாவிற்கு துணையாக அந்த அணியின் சிராக் பேட்டிங் ஆட தொடங்கினார். இருவரும் தமிழக பந்துவீச்சாளர்களை ஒருகை பார்த்தனர்.
இந்த ரஞ்சி கோப்பை முழுவதும் தமிழக அணிக்கு இருந்த முக்கிய பிரச்சனை இதுதான். முக்கிய விக்கெட்டுகளை உடனடியாக வீழ்த்தினாலும், கடைசி கட்ட வீரர்களை அவுட்டாக்க முடியாமல் இந்தப் போட்டியிலும் தமிழக பவுலர்கள் திணறினர்.
சரி, இனி வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலைக்கு வந்த பிறகு முதல் இன்னிங்ஸ் லீடாவது பெறலாம் என தமிழக அணி நினைத்தபோது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார் சிராக். வசதேவா 132 ரன்னில் வெளியேற, சிராக் தொடர்ந்து தமிழக பவுலருக்கு பெருன் பிரச்சனையாக இருந்தார். கேப்டன் உனத்கட்டும் நல்ல ஒத்துழைப்பு தர இருவரும் தொடர்ந்து ரன்களை சேர்த்தனர்.
கடைசியில் 481/9 என சவுராஷ்ட்ரா இருந்தபோது இரு அணிகளும் போட்டியை முடித்து கொண்டனர். ஆட்டம் டிரா ஆனது. முதல் இன்னிங்ஸில் லீடிங் பெற்றதால் சவுராஷ்ட்ரா அணிக்கு மூன்று புள்ளிகள் கிடைத்தது.
கடைசி இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று நம்பிக்கையோடு களம் இறங்கிய தமிழக அணி வெறும் கையோடு ஊர் திரும்பியது.
அபினவ் முகுந்தை தவிர்த்து மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாடதது, குறிப்பாக முரளி விஜய், தினேஷ் கார்திக், அஸ்வின் ஆகியோர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாண்டாலும் அதிலும் தங்கள் திறமையை அவர்கள் முழுதாக வெளிப்படுத்தவில்லை. இதுவும் தமிழக அணையின் தோல்விக்கு முக்கிய காரணம்.
தமிழக அணி |

Comments
Post a Comment