இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான
உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை
வென்றது இங்கிலாந்து.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் ஆடத் தொடங்கிய
இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 241 ரன் எடுத்தது. போட்டி ‘டை’
ஆனதன் காரணமாக, ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர்
ஓவர் போடப்பட்டது. இதில் இரண்டு அணிகளுமே 15 ரன்களை எடுத்து மீண்டும் போட்டி ‘டை’ ஆனதால்
அதிக பவுண்டரிகளை அடித்த காரணத்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டிகள் யாவும் ஒரு அணிக்கு
சாதகமாகவே முடிந்துள்ள நிலையில், நேற்று நடந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல்
இருந்தது. ஆட்டத்தின் கடைசி நொடி வரை போட்டியில் அனல் பறந்தது. ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு
வாழ்கையில் மறக்க முடியாத போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடத் தொடங்கிய நியூசிலாந்தின்
தொடக்க பேட்ஸ்மேன் குப்தில் வழக்கம் போல் சீக்கிரமாக அவுட் ஆகி நடையை கட்டினார். இந்த
உலக கோப்பையில் தனி நபராக நியூசிலாந்தை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற கேப்டன்
வில்லியம்சன் மீது அணியை கரையேற்ற வேண்டிய பொறுப்பு மீண்டும் விழுந்தது. அவரை எளிதாக
சிங்கிள் அடிக்க வைக்க கூடாது என்ற குறிக்கோளில் பந்துவீசினர் இங்கிலாந்து அணியினர்.
தொடக்க பேட்ஸ்மேன் நிக்கோலஸும் வில்லியம்சனும் சீராக ரன்கள்
சேகரித்து கொண்டிருந்த நிலையில், வில்லியம்சனை அவுட்டாக்கி நியூசிலாந்திற்கு அதிர்ச்சி
அளித்தார் பிளங்கட். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, ஐம்பது
ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. அதிகபட்சமாக
நிகோலஸ் 55 ரன் அடித்தார். இங்கிலாந்து சார்பில் பிளங்கட் மற்றும் வோக்ஸ் தலா மூன்று
விக்கெடுகளை சாய்த்தனர். அரையிறுதியில் 239 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியை வெற்றி
பெற்றதால், அதே நம்பிக்கையில் இங்கிலாந்தையும் வீழ்த்தி விடலாம் என எண்ணியது நியூசிலாந்து.
இதுவரை இங்கிலாந்து வெற்றி பெற்ற போட்டிகளில் எல்லாம் அணிக்கு
பக்கபலமாக இருந்த தொடக்க பேட்ஸ்மேன் ராய், ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தில் நடுவரின்
புண்ணியத்தில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் அவர் நீண்ட நேரம்
நிலைக்கவில்லை. 17 ரன்னில் ராய் அவுட்டாக, அடுத்து வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்ல்கள்
ஒவ்வொருவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸும் பட்லரும்
ஜோடி சேர்ந்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்க போராடினர்.
ஒரு பக்கம் ஸ்டோக்ஸ்
நிதானமாக விளையாட, மறுபக்கம் பட்லர்ர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இருவரும்
அரைசதம் அடித்து களத்தில் நின்ற போது இங்கிலாந்து நிச்சியம் எளிதாக வெற்றி பெற்று விடும்
என்ற சூழல் இருந்தது. ஆனால் பட்லரை அவுட்டாக்கி ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் திருப்பினார்
ஃபெர்குஸ்ன். ஆட்டத்தில் இப்போது பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி மூன்று ஓவர்களில்
இங்கிலாந்து அணி வெற்றி பெற 34 ரன் தேவையாக இருந்தது. போல்ட் வீசிய 48-வது ஓவரில் இங்கிலாந்து
10 ரன்கள் அடிக்க, தற்போது கடைசி 12 பந்தில் 24 ரன்கள் தேவை. 49-வது ஓவரில் முக்கிய
திருப்பம் ஒன்று ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த போல்ட் கேட்ச்
பிடித்த படியே தவறுதலாக சிக்ஸர் கோட்டை மிதித்துவிட்டார். இதனால் இங்கிலாந்திற்கு ஆறு
ரன் கூடுதலக கிடைத்தது.
இப்போது ஆட்டத்தில் ஒரு ஓவரே மீதமிருக்கிறது. இங்கிலாந்து வெற்றி
பெற 15 ரன் தேவை. போல்ட் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ஸ்டோக்ஸ் எந்த ரன்னையும் எடுக்கவில்லை.
மூன்றாவது பந்தில் லெக் சைடில் அற்புதமான சிக்ஸரை அடித்தார். இப்போது மூண்று பந்துகளுக்கு
9 ரன் தேவை. அடுத்த பந்தில் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்னுக்கு ஓட, பந்தை பிடித்த குப்தில்,
கீப்பரிட்ம் வீசும் போது அது ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்று விடும். உடனடியாக
தன் தவறு எதுவும் இல்லை என ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்பார். இதனால் இங்கிலாந்திற்கு கூடுதலாக
நான்கு ரன்கள் கிடைக்கும். கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில்,
ஃபுல்டாஸாக வந்த பந்தை தட்டி விட்டு இரண்டு ரன் ஓட முயற்சிப்பார் ஸ்டோக்ஸ். எதிர்ப்புறம்
இருந்த மார்க் வுட் ரன் அவுட்டாக, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி
241 ரன்களை அடித்து போட்டி சமனில் முடியும். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க முதல்
முறையாக உலக கோப்பையில் “சூப்பர் ஓவர்” வீசப்பட்டது.
சூப்பர் ஓவர்:
அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோடியான பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரே
சூப்பர் ஓவரிலும் இங்கிலாந்து அணிக்காக களம் இறங்கினார். போல்ட் வீசிய அந்த ஓவரில்
ஆளுக்கு ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்களை எடுத்தனர். 16 ரன்களை எடுத்தால் முதல் முறையாக
உலக கோப்பையை உச்சி முகரால் என்ற நம்பிக்கையில் ஜிம்மி நீஷமும் மார்டின் குப்திலும்
நியூசிலாந்து அணிக்காக களம் இறங்கினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்தில் சிக்ஸர்
அடித்து பரபரப்பை அதிகப்படுத்தினார் நீஷம். கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி
பெறலாம் என்ற நிலையில், லெக் சைடில் தட்டி விட்டு இரண்டு ரன் ஓடிய குப்தில் ரன் அவுட்
ஆக, நியூசிலாந்து அணியின் கனவு தகர்ந்து போனது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து
வீர்ர்கள் துள்ளி குதித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி முதன் முறையாக உலக கோப்பையை
வென்றது.
Comments
Post a Comment