இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
சயன கோலத்தில் அத்திவரதர் |
அத்தி வரதரை எப்போ தரிசிக்க போறீங்க? இன்னும் ஏன் பாக்காமா இருக்கீங்க?
இனி 40 வருஷத்துக்கு பிறகு தான் பார்க்க முடியும், உடனே கிளம்புங்க… நீங்க தமிழ்நாட்டுல
வசிப்பவரா இருந்தா, கடந்த ஒரு மாசத்துல மேலே சொன்ன கேள்விய உங்ககிட்ட கண்டிப்பா ஒரு
தடவையாவது யாராவது ஒருத்தர் கேட்டிருப்பாங்க. பத்திரிக்கை செய்தியிலும், தொலைக்காட்சி
நேரலையிலும், சமூக ஊடகத்திலும் கூட கடந்த ஒரு மாதமாக அத்தி வரதரே எங்கும் நிரம்பியிருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிகிறார்கள்.
அப்படியென்ன விசஷேம் இந்த கோலில் இருக்கிறது?
"கோயில் நகரம்" என அழைக்கபடும் காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜப்
பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள
ஆனந்த சரஸ் குளத்திலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை அத்தி மரத்தாலான பெருமாளின்
திருவுருவம் வெளியே எடுக்கப்படுகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன்
ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர். 48
நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம் தரும் அத்திவரதர், முதல் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும்
(படுத்த படியே) அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவார். இதைக் காணவே லட்சக்கணக்கான
மக்கள் காஞ்சிபுரத்தில் குவிகிறார்கள்.
பெயர் காரணம்:
அத்தி மரத்தில் இந்த சிலை செய்யப்பட்டதாலும், கேட்கும் வரனை
கொடுப்பதாலும் அத்திவரதர் என அழைக்கபடுகிறார். இதில் விசஷேம் என்னவென்றால், இத்தனை யுகங்கள் தாண்டியும் இந்த சிலை இன்னும் பழுதடையாமல் இருக்கிறது என்பது தான்.
அத்தி வரதர் சிலை ஏன் குளத்திற்குள் வைக்கப்பட்டது? ஏன் 40 வருடத்திற்கு
ஒரு முறை வெளியே எடுக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பல கதைகள் சொல்லபடுகின்றன.
சரஸ்வதி தேவிக்கும் அவரது கனவர் பிரம்ம தேவருக்கும் இடையே சிறு பிரச்சனை ஏற்படுகிறது.
கோபத்தில் பிரம தேவரின் மந்திரக் கோலை எடுத்துச் சென்று விடுகிறாள் சரஸ்வதி. அதை மீட்க
அத்தி மரக் காட்டில் அஸ்வமேத யகத்தை தொடங்குகிறார் பிரம்மா. யாகத்தை எப்படியாவது தடுக்க
வேண்டும் என்ற ஆத்திரத்தில் வேகவதி ஆறாக மாறி பெருக்கெடுத்து ஓடுகிறாள் சரஸ்வதி தேவி.
தன் யாகம் பாதியிலேயே முடிந்து விடுமோ என்ற பயம் பிரம்மாவுகு. அவருக்கு ஒன்றும் ஓடவில்லை.
அந்த சமயத்தில் புனித யாக வேள்வியில் இருந்து அத்திவரதராக எழுந்தருள்கிறார் பெருமாள்.
சரஸ்வதியை சமாதானம் செய்து யாகத்தை தொடர வழிவகை செய்கிறார். தனது யாகத்தை காப்பாற்றிய
பெருமாளை மனமுருகி வணங்கினார் பிரம்மா. அவருக்காக அத்தி மரத்திலான ஒன்பது அடி நீளம்
கொண்ட சிலையையும் வடிவமைத்தார். இப்படியொரு கதை சொல்லப்படுகிறது.
ஆனந்த சரஸ் குளம் |
இன்னொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. அதாவது மீண்டும் ஒருமுறை பிரம்ம
தேவர் நடத்திய யாகத்தின் போது அத்திரவரதர் சிலை சேதமடைகிறது. இதனால் நீண்ட காலத்திற்கு
மக்களுக்கு தரிசனம் தர முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. மனமுருகி திருமாலை வேண்டுகிறார்
பிரம்மா. உடனடியாக காட்சி தரும் திருமால், கோயிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்தில் உள்ள
மணடபத்தின் கீழ் வெள்ளிப்பேழைக்குள் அத்திரவரதர் சிலையை வைக்குமாறு ஆலோசனை கூறுகிறார்.
மேலும், 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்து நீரையெல்லாம் இறைத்து விட்டு மேலே வருவேன்
என்றும் அப்போது 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தருவேன் என்றும் பிரம்ம தேவரிடம்
கூறியுள்ளார்.
வாழ்நாளில் ஒரு முறை தான் அத்திரவரதரை பார்க்க முடியும் என்ற
காரணத்தினால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு அவரை தரிசிக்க வருகிறார்கள்.
இதுவரை இப்படியொரு கூட்டத்தை பார்க்காத காஞ்சிபுர நகரம் திக்கு முக்காடி வருகிறது. இதை
தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக பயன்படுத்தி அங்குள்ள ஹோட்டல்களும் லாட்ஜுகளூம்
வாடகையை அதிகளவு உயர்த்தியுள்ளன. சில ஹோட்டல்களில் ஒரு நாள் இரவு தங்குவதற்கே
11,000 வசூலிக்கப்படுகிறது.
கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சயன கோலத்தில் இருந்த அத்திவரதர்,
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முன்பு பார்க்காதவர்கள்
இந்த முறை குடும்பத்தோடு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.
புகைப்படங்கள் உதவி: ஆலயங்கள் அறிவோம் ப்ளாக்
Comments
Post a Comment