Skip to main content

மீண்டும் கனவாகிப் போன ரஞ்சி கோப்பை😢

இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ

இந்திய கிரிக்கெட் அணியின் 'முதல்' வேகப் பந்துவீச்சாளர்

அமர் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர்
அமர் சிங் பந்துவீசும் காட்சி



சுமார் 87 வருஷமா நம்ம இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தனை வருஷத்துல நம்ம அணிக்காக விளையாடிய 10 வேகப்பந்து வீச்சாளரின் பெயரை உடனே சொல்லுங்க பார்ப்போம். வெங்கடேஷ் பிரசாத், ஆர்.பி.சிங், மனோஜ் பிரபாகர், அகார்கர் போன்ற பவுலர்களின் பெயரை நான் கேட்கவில்லை.

நான் கூறுவது “முழுமையான” வேகப்பந்து வீச்சாளர். தான் போடக்கூடிய ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்க வேண்டும். பேட்ஸ்மேன் உங்களை கண்டு நடுங்க வேண்டும். ஸ்டம்புகள் தெறிக்க வேண்டும். இவன் ஓவர் எப்போதுடா முடியும் என உள்ளுக்குள் பேட்ஸ்மேன் கதற வேண்டும். அவன் தான் முழுமையான வேகப்பந்துவீச்சாளர்.

கபில் தேவ், ஜாகீர் கான், பும்ரா, வேற…வேற……சரி உங்க ஆசைக்கு ஸ்ரீநாத் (இவர் மித வேகப்பந்து வீச்சாளர் என்பதே என் எண்ணம்) பெயரையும் சேர்ப்போம். வேறு யாருடைய பெயராவது உங்கள் மனதில் தோன்றுகிறதா?

ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு எந்தளவிற்கு முக்கியமானவர் என்பதற்கு நம் கண் முன் உதாரணமாக இருக்கிறார் பும்ரா. எத்தனை குறைவாக ரன் அடித்தாலும், பும்ரா இருக்கிறார் என்ற தைரியம் நமக்கு உள்ளது. அந்த நம்பிக்கைக்கு காரணம், எந்தவொரு சிறந்த பேட்ஸ்மேனையும் நடுங்க வைக்கும் அவரது வேகம்.

சரி, 100 வருடமாக கிரிக்கெட் விளையாடும் இந்தியாவில், வேகப்பந்து வீச்சாளரின் பெயரை கேட்டால் நம்மால் ஐந்துக்கும் குறைவான பெயரை மட்டும் தான் கை காட்ட முடியுமா? இல்லை. நிச்சியம் இல்லை. நம் அணியிலும் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்துள்ளார்கள். ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், அரசியல் சூழ்ச்சியாலும், வறுமையாலும், நோயாலும் பல திறமையானவர்களை நாம் இழந்துள்ளோம்.

அப்படி ஒருவர் தான் அமர் சிங்.

ஆறடி உயர இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமர் சிங்
அமர் சிங்


ஆறடி உயரம். வேகப்பந்து வீச்சாளருக்கே உரிய விரிந்த, வலுவான தோள்கள். மின்னல் போன்ற வேகம். புதிய பந்தில் சர்வ சாதாரணமாக இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் போடும் திறன். (மேகம் இருந்தால் தான் ஸ்விங் ஆகும் என்று கூறுபவர் அல்ல). பவுலிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சூறப்புலி. சிறந்த ஸ்லிப் ஃபீல்டர். சுருக்கமா சொன்னா ஒரு Complete All-Rounder.

1910-ம் வருடம் குஜராத் மாநிலத்தில் பிறந்த லாதா அமர் சிங், மகாத்மா காந்தி படித்த ஆல்ஃப்ரட் பள்ளியில் தான் படித்தார். ஆரம்பத்தில் பள்ளி அணியில் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடியுள்ளார் அமர் சிங். ஆனால் இவரது உயரத்தையும் உடலமைப்பையும் பார்த்த பயிற்சியாளர், “தம்பீ, பேட்ஸ்மேனாகும் எண்ணத்தை இதோட மறந்துரு. வேகப்பந்து வீச்சாளருக்குரிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கு. உன் பவுலிங்கில் கவனம் செலுத்து” என கூறியுள்ளார்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகப்பந்து வீச்சு திறமையை வளர்த்துக் கொண்ட அமர் சிங், நவாநகர் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட தொடங்கினார். இந்த சமயத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இந்திய அணி, தனது முதல் டெஸ்ட் போட்டிக்காக தயாராகி கொண்டிருந்தது. ஒரு பக்கம் அணி தேர்வு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அமர் சிங்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் எளிதாக இடம் கிடைத்துவிடும் என அனைவரும் நினைத்திருந்தனர். அதுதான் இல்லை. அப்போதெல்லாம் அணியின் உள்விவகாரங்களில் மகாராஜாக்களின் தலையீடு அதிகமாக இருந்தது. ஏற்கனவே அமர் சிங்கின் சகோதரர் ராம்ஜிக்கும் மகாராஜாவுக்கும் இடையே சிறு பிரச்சனை இருந்த காரணத்தினால் அமர் சிங்கின் பெயரை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் ரஞ்சித்சிங்ஜியின் சிபாரிசினால் கடைசி நிமிடத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி


முதல் டெஸ்ட் விளையாட இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி
1932-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி.
இடது பக்கத்திலிருந்து 5-வதாக நிற்பவர் அமர் சிங்


1932-ம் ஆண்டு போர்பந்தர் மகாராஜா தலைமையில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றது. அமர் சிங்கை தவிர்த்து முகமது நிசார் என்ற அற்புதமான வேகப்பந்து வீச்சாளரும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஏப்ரல் 13,1932 அன்று இங்கிலாந்தில் தரையிறங்கிய போது, இந்திய அணியைப் பற்றி இங்கிலாந்து நாட்டின் நாளிதழ்கள் புகழ்ந்து தலையங்கம் எழுதின.

“அரசியல் இல்லை, ஜாதி இல்லை, கிரிக்கெட் மட்டுமே” என இந்திய அணி குறித்து இங்கிலாந்து பத்திரிகை ஒன்று புகழ்ந்து எழுதியது. இதற்கு காரணம், இந்திய அணியில் பல மாநிலங்களைச் சேர்ந்த, பல மொழிகளை பேசும் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணி விளையாட இருந்தாலும், அதற்கு முன்னதாக இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகளோடு பல முதல் தர போட்டிகளில் கலந்துகொண்டது.

இங்கிலாந்தின் சூழ்நிலை அமர் சிங்கின் பந்துவீச்சிற்கு நன்றாக ஒத்துழைத்தது. குறைவான தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசினாலும், அவரது வேகமும் துல்லியமும் ஸ்டம்பை பதம் பார்த்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து சுற்றுபயணத்தில் 27 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை அள்ளினார்.

“இப்போதுள்ள (1930-களில்) வீரர்களில் அமர் சிங்கே சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இவரைப் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளரை நான் சந்தித்ததேயில்லை. அவர் பவுலிங் போட ஓடி வருவதே இடி முழங்குவது போல் இருக்கும்” என இந்திய சுற்றுப்பயணம் முடிந்ததும் அமர் சிங்கை வெகுவாக புகழ்ந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் Wally Hammond.

டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் அரைசதம் அடித்த அமர் சிங்


மூன்று நாள் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இணை (அமர் சிங் மற்றும் முகமது நிசார்) இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தனர். அந்த டெஸ்டில் பவுலிங்கில் அதிகமாக விக்கெட் எடுக்காவிட்டாலும் இக்கட்டான சமயத்தில் பத்தாவது வீர்ராக களம் இறங்கி அரை சதம் அடித்து, டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் சிங். 

முக்கியமா சிங்கோடு பேட்டிங் பத்தி சொல்லியே ஆகனும். களத்துல இறங்கிட்டா சும்மா லொட்டு, லொட்டு-ன்னு தடவாமா, அடிச்சா ரன், இல்லாட்டி அவுட் அப்படிங்குற ஃபார்முலாவ தான் கடைபிடிச்சார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கவுண்டி அணியுடனான போட்டியில் 10-வது வீரரா இறங்கி 131 ரன் அடிக்குறதெல்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனா, பேட்டிங்கோ, பவுலிங்கோ ரசிகர்களை சந்தோஷப்படுத்த அவர் தவறியதேயில்லை.

முக்கியமான போட்டி


அடுத்து, 1933/34-ம் ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வந்தது இங்கிலாந்து அணி. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் அமர் சிங்குடைய கேரியர்ல முக்கியமான போட்டியாக அமைந்தது. சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியில், பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் எடுத்ததோடு, தனி ஒருவராக 44 ஓவர்கள் வீசிய சிங், எழு விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சாதனை 46 வருடங்கள் கழித்து இதே சென்னை மைதானத்தில் கபில்தேவ் ஏழு விக்கெட் எடுக்கும் வரை நீடித்தது. இதேப் போல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 55 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்திருப்பார் சிங்.

1937/38-ல் ஐந்து அதிகாரப் பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது இங்கிலாந்து அணி. தான் ஒரு உலகளாவிய வேகப்பந்து வீச்சாளர் என்பதை இந்த தொடரில் நிரூபித்தார் அமர் சிங். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 36 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்தியாவின் பேட்டிங் மட்டும் சற்று வலுவாக இருந்திருந்தால், பல போட்டிகளில் வெற்றி கிடைத்திருக்கும். அதோடு, இந்திய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங் நல்லா இருந்திருந்தா இன்னும் அதிகமான விக்கெட்டை அமர் சிங் எடுத்திருப்பார்.  

இவ்வுளவு திறமை வாய்ந்த அமர் சிங், இந்தியாவிற்காக எத்தனை டெஸ்ட் போட்டிகள் விளையாடினார் தெரியுமா? வெறும் ஏழு போட்டிகள். இதற்கு பல காரணங்களை கூறலாம்.

  • அந்த சமயத்தில் இந்திய அணி குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே பங்கு கொண்டது

  • வீரர்களின் Workload Management-யை கவனிக்க அணியில் முறையான நபர்கள் இல்லாதது. உங்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் பவுலிங்கில் ஏதாவது குறை இருந்தாலோ அதை மீட்டு சரிசெய்வது மிகக்கடினம். உதாரணத்திற்கு அமர் சிங்கை எடுத்துக்கொண்டால், தான் விளையாடிய ஒவ்வொரு போடியிலும் 35 ஓவருக்கு குறையாமல் பந்து வீசியுள்ளார்.

  • அணியை தேர்ந்தெடுப்பதில் இருந்த அரசியல்


திறமையாளர்களை துரத்தும் சோகம் அமர் சிங்கையும் விட்டு வைக்கவில்லை. திடீரென்று காய்ச்சலில் விழுந்தவர் அதிலிருந்து மீளவேயில்லை. படுத்த படுக்கையாக இருந்த சிங் மே 21,1940 அன்று தனது 29-வது வயதில் உயிரிழந்தார்.

அமர் சிங்கோடு ஒன்றாக விளையாடிய முஷ்தாக் அலி அவரைப் பற்றி இப்படி கூறுகிறார்:

“கடந்த காலத்தில் உச்சத்தில் இருந்த வீரர்களுக்கு நிகராக இன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் விளையாடுவதை பார்க்கிறேன். ஆனால், அவர்களில் அமர் சிங்கை போல் ஒருவரையும் என்னால் பார்க்க முடியவில்லை”



புகைப்படங்கள் உதவி: The Hindu, The Cricketer International 
 

  


  



Comments

Popular posts from this blog

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் இதோ....

பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது. பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம். ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நிச்சியம் முடியும்! இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன். இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம். பேஸ்புக் பக்கம் (Facebook Page) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்

நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும். சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை. வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website): உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்

சயன கோலத்தில் அத்திவரதர் அத்தி வரதரை எப்போ தரிசிக்க போறீங்க? இன்னும் ஏன் பாக்காமா இருக்கீங்க? இனி 40 வருஷத்துக்கு பிறகு தான் பார்க்க முடியும், உடனே கிளம்புங்க… நீங்க தமிழ்நாட்டுல வசிப்பவரா இருந்தா, கடந்த ஒரு மாசத்துல மேலே சொன்ன கேள்விய உங்ககிட்ட கண்டிப்பா ஒரு தடவையாவது யாராவது ஒருத்தர் கேட்டிருப்பாங்க. பத்திரிக்கை செய்தியிலும், தொலைக்காட்சி நேரலையிலும், சமூக ஊடகத்திலும் கூட கடந்த ஒரு மாதமாக அத்தி வரதரே எங்கும் நிரம்பியிருகிறார். அதுமட்டுமல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிகிறார்கள். அப்படியென்ன விசஷேம் இந்த கோலில் இருக்கிறது? "கோயில் நகரம்" என அழைக்கபடும் காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜப் பெருமாள் கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள ஆனந்த சரஸ் குளத்திலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை அத்தி மரத்தாலான பெருமாளின் திருவுருவம் வெளியே எடுக்கப்படுகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி தருகிறார் அத்திவரதர். 48 நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம்