இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
கங்குலி |
பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது பலருக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுல முக்கியமான ஒன்னா நான் பாக்குறது டெஸ்ட் மேட்ச்க்கு கங்குலி கொடுக்கும் முக்கியத்துவம்.
பல ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டிக்குக்கு அனுமதி தராத நம்ம கிரிக்கெட் வாரியம், இப்போது கங்குலி தலைவரான பிறகு அந்த முடிவை மாற்றியுள்ளது. தான் பதவியேற்ற உடனேயே கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு போட்டியை நடத்தி காட்டினார்.
இப்போது ஒரு படி மேலே போய், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்டியும், இங்கிலாந்து இந்தியாவிற்கு வரும்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் மைதானத்தில் ஒரு போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்😍😍.
இதுதவிர டெஸ்ட் போட்டியை பிரபலபடுத்த தனியாக மார்கெட்டிங் குழு ஒன்றை நியமித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்களிடம் பிரபலபடுத்தவே இந்த முடிவு என்று தெளிவாக தெரிகிறது.
நம் கிரிக்கெட் உலகம் சார்பாக சில பரிந்துரைகள்:
👉டெஸ்ட் போட்டியை வளர்த்தெடுக்க திருவிழா ( தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை ) சமயங்களில் நடத்தலாம்.
👉கோலி முன்பு கூறியது போல் இந்தியாவில் 5 மைதானங்களில் ( சென்னை, மும்பை, பெங்களுரு, மொகாலி/தர்மசாலா, கொல்கத்தா ) மட்டும் டெஸ்ட் போட்டியை நடத்தலாம்.
👉'பாக்சிங் டே' டெஸ்ட் போல், 1980 வரை சென்னையில் நடைபெற்ற பொங்கல் டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்தலாம்.
இன்னொரு அறிவிப்பாக பிசிசிஐ செயலி (App) விரைவில் அறிமுகப்படும் என்றும் கங்குலி கூறியிருந்தார். இந்த ஆப் ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது போல் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்கள் ரசிகர்களை கவர பல வழிகளை பயன்படுத்துவது போல.
குறிப்பாக, எந்த ஒரு போட்டி முடிந்த பிறகும் அது சம்மந்தமான சுவாரஸ்யமான ஹைலைட்ஸ் வீடியோக்களை உடனடியாக யூடுபில் வெளியிட வேண்டும். இன்று ஹாட்ஸ்டார் இல்லையென்றால் இந்தியா விளையாடும் போட்டியின் ஹைலைட்ஸை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு இது எவ்வுளவு பெரிய வேதனை. போட்டி முடிந்த பிறகு வீரர்களின் டிரெஸிங் ரூமில் நடைபெறும் கொண்டாட்டத்தை வீடியோவாக இந்த செயலியில் (App) வெளியிடலாம்.
1960,70,80-களில் இந்தியா வெற்றி பெற்ற முக்கியமான போட்டிகளின் வீடியோக்களை நல்ல தரத்தில் வெளியிடலாம்.
Comments
Post a Comment