இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
அமர் சிங் பந்துவீசும் காட்சி சுமார் 87 வருஷமா நம்ம இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தனை வருஷத்துல நம்ம அணிக்காக விளையாடிய 10 வேகப்பந்து வீச்சாளரின் பெயரை உடனே சொல்லுங்க பார்ப்போம். வெங்கடேஷ் பிரசாத், ஆர்.பி.சிங், மனோஜ் பிரபாகர், அகார்கர் போன்ற பவுலர்களின் பெயரை நான் கேட்கவில்லை. நான் கூறுவது “முழுமையான” வேகப்பந்து வீச்சாளர். தான் போடக்கூடிய ஒவ்வொரு பந்திலும் அனல் பறக்க வேண்டும். பேட்ஸ்மேன் உங்களை கண்டு நடுங்க வேண்டும். ஸ்டம்புகள் தெறிக்க வேண்டும். இவன் ஓவர் எப்போதுடா முடியும் என உள்ளுக்குள் பேட்ஸ்மேன் கதற வேண்டும். அவன் தான் முழுமையான வேகப்பந்துவீச்சாளர். கபில் தேவ், ஜாகீர் கான், பும்ரா, வேற…வேற……சரி உங்க ஆசைக்கு ஸ்ரீநாத் (இவர் மித வேகப்பந்து வீச்சாளர் என்பதே என் எண்ணம்) பெயரையும் சேர்ப்போம். வேறு யாருடைய பெயராவது உங்கள் மனதில் தோன்றுகிறதா? ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு எந்தளவிற்கு முக்கியமானவர் என்பதற்கு நம் கண் முன் உதாரணமாக இருக்கிறார் பும்ரா. எத்தனை குறைவாக ரன் அடித்தாலும், பும்ரா இருக்கிறார் என்ற தைரியம் நமக்கு உள்ளது. அந்த ந