இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் மத்தியபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ் அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டியியோல் தனது அறிமுக போட்டியிலேயே, அதுவும் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையே அது. இதில் ஆச்சர்யமான விஷயம், இந்த சாதனையை தான் பிறந்து வளர்ந்த மாநிலமான உத்தரபிரதேச அணிக்கு எதிராகவே படைத்துள்ளார். "இது என் அதிர்ஷடமா என தெரியவில்லை. ஆனால் இந்த சாதனை உத்தரபிரதேசத்திற்கு எதிராக வந்துள்ளது. நான் அங்கு சிறு வயதில் இருந்தே விளையாடி வந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக ரஞ்சி வீரராக ஆகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் 28 வயதான ரவி யாதவ். ரெய்னா, ஆர்.பி.சிங் பயின்ற லக்னோவில் உள்ள விளையாட்டு கல்லூரியிலிருந்து தான் ரவியும் தேர்ச்சி பெற்றார். ஆனால் காயம் காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். அவர் கூறுகையில், எனது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. என்னுடன் U19 அணியில் விளையாடியவர்கள் எல்லாம் முன்னேறி சென்று கொண்டிருந்ததை பார்த்த போது நான் மட