இந்த முறையும் தமிழக அணிக்கு கனவாகிப் போனது ரஞ்சி கோப்பை.. கடைசி போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஏதாவது அதிர்ஷடம் நடந்தால் காலிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற 'நப்பாசையுடன்' தனது கடைசி சுற்று போட்டியில் சவுராஷ்ட்ரா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய தமிழக அணியில், நல்ல பார்மில் இருக்கும் அபினவ் முகுந்த் 86 ரன் அடிக்க அவருக்கு துணையாக எந்த வீரரும் சரியாக பேட்டிங் பிடிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக கைவிட, இக்கட்டான நிலையிலிருந்த தமிழக அணியை மீட்க உதவினார் கீப்பர் ஜெகதீசன். தமிழக அணி இந்த வருடம் மோசமான பார்மில் தவித்துக் கொண்டிருந்த ஜெகதீசன், முக்கியமான கட்டத்தில் சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்னனை கூட தாண்டாதோ என நினைத்த வேளையில் அணியின் ஸ்கோரை 424-க்கு கொண்டு வந்தார் ஜெகதீசன். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் முகமது (42). கடைசியில் ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். நல்ல ஸ்கோர் இருந்ததால் எப்படியும் சவுராஷ்ட்ரா அணியை குறைந்த ரன்னில் வீழ்த்தி விடலாம் என்ற நினைத்தது தமிழகம். தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேற, தமிழ
ஆறு மாதத்திற்கு முன்பு இந்தியாவும் நியூசிலாந்தும் சந்தித்த போது தன் சிறந்த பீல்டிங்கால் தோனியை அவுட்டாக்கி நம் நெஞ்சை மட்டுமல்லாமல் உலக கோப்பை கனவையும் தகர்த்த குப்தில், இன்றும் அதேபோல் ஒரு சிறந்த பீல்டிங்கால் நன்றாக ஆடிக் கொண்டிருந்த கோலியை அவுட்டாக்கினார். கோலி அவுட்டாகிய போது இந்திய அணி வெற்றி பெற 40 பந்துகளில் 62 ரன் தேவையாக இருந்தது. இனி அவ்வுளவுதான் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் மறுபக்கம் நின்று கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எப்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் கடைசி போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தாரோ, அதேப்போல் இன்றும் தனது அதிரடியால் இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்துள்ளார்.
ஷ்ரேயாஸ் அதிரடியாக ஆடினாலும் அவரிடம் நிதானமும் பக்குவமும் இருந்தது. எந்த பந்தை எந்த பக்கம் அடித்து விரட்ட வேண்டும் என்ற தெளிவு இருந்தது. கடைசியில் தோனி போல் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 203 என்ற கடினமான இலக்கை தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இல்லாமல் ஜெயித்துள்ளோம்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முன்ரோவும் குப்திலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். பும்ராவின் பவுலிங்கை தவிர யார் போட வந்தாலும் அவர்களை வெளுத்து வாங்கினர்.
220 ரன்களுக்கே மேல் நியூசிலாந்து ஸ்கோர் செல்லலாம் என நினைத்தபோது கடைசி கட்டத்தில் பும்ரா வீசிய இரண்டு ஓவர்கள் ரன்களை கட்டுப்படுத்தின. நியூசிலாந்து சார்பில் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். குறிப்பாக ஆறு வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் அரைசதம் அடித்துள்ளார் டெய்லர்.
இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போல் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ரோகித் சர்மா விரைவிலேயே அவுட்டானாலும் ராகுலுடன் கூட்டணி சேர்ந்த கோலி ரன்ரேட்டை பத்துக்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். ஒரு சமயத்தில் நியூசிலாந்து பீல்டர்கள் செய்த மிகப்பெரிய தவறால் இருவரும் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்தனர். அற்புதமான பார்மில் இருக்கும் ராகுல் 23 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். இதில் சில அற்புதமான சிக்சர்களும் அடங்கும். குறிப்பாக அற்புதமாக flick ஷாட் மூலம் லெக் சைடில் ராகுல் சிக்ஸ் அடித்த போது கோலி அதை வெகுவாக பாராட்டினார்.
எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்த வேளையில் சிறிய இடைவெளியில் ராகுலும் கோலியும் தங்கள் விக்கெட்டை இழந்தனர். இனிமேல் தங்களுக்கு தான் வெற்றி என நினைத்துக் கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்களுக்கு எமனாக வந்து நின்றார் ஆட்டநாயகன் ஷ்ரேயாஸ் ஐயர். அவருக்கு பக்க பலமாக இருந்தார் மனிஷ் பாண்டே. முடிவில் ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
போட்டி முடிந்ததும் பேசிய கோலி, "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்தோம். முதல் போட்டியே தொடருக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது. போட்டியை பார்க்க வந்த ரசிகர்களில் 80℅ இந்தியர்கள் என்பதால் எங்களுக்கு நல்ல ஆதரவு இருந்தது" என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "வெளிநாட்டிற்கு வந்து, முதல் போட்டியில் வெற்றி பெற்று நாட் அவுட்டாகவும் இருப்பது அருமையான உணர்வை கொடுக்கிறது. மைதானம் சிறியதாக இருப்பதால் எந்த நேரத்திலும் ரன் ரேட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்த போட்டிகளிலும் இன்றுபோல் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்".
துணுக்கு செய்தி: நியூசிலாந்து பேட்டிங் பிடித்த போது 20-வது ஓவரை வீசிய பும்ராவிற்கு காலில் சிறு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து அவர் பந்து வீசினாலும், காயத்தின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என இன்னும் முழுமையாக தெரியவில்லை.
#NZvsIND
**********
கிரிக்கெட் உலகம் பக்கத்திற்காக நான் எழுதிய மேட்ச் ரிப்போர்ட்.
Comments
Post a Comment